பிப்.24 பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினம்.. தமிழக அரசின் அரசாணை வெளியீடு!

 

பிப்.24 பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினம்.. தமிழக அரசின் அரசாணை வெளியீடு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியே பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும் என்று சட்ட விதி 110 கீழ் அறிவித்தார். 

பட்ஜெட் தொடர்பான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் குடியுரிமை சட்டத்திருத்தம், வேளாண் மண்டலம் உள்ளிட்ட பல விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, பிப்ரவரி 24 ஆம் தேதி பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினம் என்று முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியே பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தினமாகக் கொண்டாடப்படும் என்று சட்ட விதி 110 கீழ் அறிவித்தார். 

ttn

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பிப்.24 ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு நாடகங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.