பிப்ரவரி 2 ஆம் வாரத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கத் திட்டம் !

 

பிப்ரவரி 2 ஆம் வாரத்திற்குள் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்கத் திட்டம் !

9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து, மூன்று மாத காலத்திற்குள் அதனை முடித்துத் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை எதிர்த்து, புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில்  வார்டு மறுவரையறை பணிகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக வழக்குப்பதிவு செய்தது. அதனால், அந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து, மூன்று மாத காலத்திற்குள் அதனை முடித்துத் தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் படி, அந்த 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. மேலும், மறைமுக தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. 

ttn

நீதிமன்றம் கொடுத்த மூன்று மாத கால அவகாசம் வரும் மார்ச் மாதத்தோடு முடிவடைவதால் இது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 9 மாவட்டங்களின் வார்டு மறுவரையறை வரைவுப் பட்டியலைப் பிப்ரவரி 2 ஆம் வாரத்திற்குள் தாயார் செய்து அரசாணை வெளியிடும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.