பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்! ஆலோசனைகளை அள்ளி வழங்குங்க! மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்

 

பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்! ஆலோசனைகளை அள்ளி வழங்குங்க! மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்

மத்திய பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் 2020-21ம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பல்வேறு துறைகளை சேர்ந்த தலைவர்களிடம் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

நிர்மலா சீதாராமன்

இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பட்ஜெட் தொடர்பான தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை httpshttps://www.mygov.in/group-issue/inviting-ideas-and-suggestions-union-budget-2020-2021/ என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என மோடி தெரிவித்துள்ளார். மேலும் இன்று பொருளாதார நிபுணர்களை மோடி சந்தித்து பேச உள்ளார்.

மத்திய பட்ஜெட் தொடர்பான ஐடியாக்கள் வரவேற்பு

நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான  அமைச்சரவை குழு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை இம்மாதம் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடத்த பரிந்துரை செய்துள்ளது. முதல் கட்டமாக ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரையும், இரண்டாவது கட்டமாக மார்ச் 2 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரையும் நடத்த அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.