பிப்ரவரி மாதம் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்: தமிழக அரசு உறுதி

 

பிப்ரவரி மாதம் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்: தமிழக அரசு உறுதி

பிப்ரவரி மாதத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

டெல்லி: பிப்ரவரி மாதத்தில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்படும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

முதல்வர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் ஊழல்களை விசாரணை செய்வதற்காக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா செயல்பட்டு வருகிறது. ஆனால் 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா செயல்படவில்லை. இதில் தமிழகமும் ஒன்று.

இதனையடுத்து லோக் ஆயுக்தா செயல்படாத மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து தமிழக சட்டபேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா  கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், லோக் ஆயுக்தா தொடர்பான பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது லோக் ஆயுக்தா அமைக்காதது குறித்து தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்தது.தொடர்ந்து தமிழக அரசுக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.