பிப்ரவரி பட ரேசில் இருந்து விலகிய ஓவியா

 

பிப்ரவரி பட ரேசில் இருந்து விலகிய ஓவியா

நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ml படத்தின் ரிலீஸ் தேதி சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளிப்போய் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகை ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90ml படத்தின் ரிலீஸ் தேதி சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளிப்போய் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

களவாணி, கலகலப்பு, மெரினா போன்ற திரைப்படங்களில் நடித்த ஓவியா திரைப்பட வாய்ப்புகள் இன்றி பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பங்குக்கேற்று தனது நேர்மையான குணத்தின் மூலம் மக்களின் அன்பு மட்டுமின்றி திரைப்பட வாய்ப்புகளும் ஓவியாவுக்கு குவிந்தன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் குளிர் 100 டிகிரி திரைப்படத்தை இயக்கிய அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள திரைப்படம் 90ml. 

அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பல சர்ச்சையை கிளப்பியது. அதைத்தொடர்ந்து 90ml திரைப்படம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுருந்தது.

இந்நிலையில் 90ml திரைப்படம் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக நடிகை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . மேலும் படம் வெளியாகும்  அன்று அதிகாலை காட்சியில் ரசிகர்களை சந்திக்கவிருப்பதாகவும் அதில் கூறியுள்ளார்.