பித்ரு தோஷம் நீக்குவதில் காசிக்கு இணையான தமிழக கோவில் 

 

பித்ரு தோஷம் நீக்குவதில் காசிக்கு இணையான தமிழக கோவில் 

கர்ம வினைகளைப் போக்க எல்லோரும் காசிக்கு செல்வார்கள். ஆனால் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இணையான… ஏன் இன்னும் சொல்லப் போனால் காசியை விட மேலான கோயில் ஒன்று நம் தமிழகத்தில் உள்ளது.  கங்கை கரையினில் காசி இருப்பதைப் போல சங்கராபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது இந்த கோயில்

கர்ம வினைகளைப் போக்க எல்லோரும் காசிக்கு செல்வார்கள். ஆனால் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இணையான… ஏன் இன்னும் சொல்லப் போனால் காசியை விட மேலான கோயில் ஒன்று நம் தமிழகத்தில் உள்ளது.  கங்கை கரையினில் காசி இருப்பதைப் போல சங்கராபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது இந்த கோயில். 

temple

செஞ்சியில் தோன்றி விழுப்புரம் வழியாக தவழ்ந்து புதுச்சேரிக்கு அருகில் கடலில் கலக்கும் சங்கராபரணியை ‘செஞ்சியாறு’, ‘கிளிஞ்சளாறு’, ‘வராக நதி’ என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். அந்த ‘வராக நதி’க்கரையின் ஓரத்தில் தான் அமைந்திருக்கிறது 
புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரில் சிவனுக்கு உகந்த வேதம் என்கிற ஊரினையுடைய வேதபுரியில் இருக்கிறது திருக்காஞ்சி. காசிக்கு நிகரான ஊர் இது. இந்த திருக்காஞ்சியில் வீற்றிருக்கும் வராக நந்தீஸ்வரர் ஆலயம் தான் பித்ரு தோஷங்களை நீக்குவதில் காசியை விட பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் தான் இந்த இறைவனை ஸ்ரீ கங்கை வராக நந்தீஸ்வரர் என்று கங்கையையும் அடைமொழியாக சேர்த்தே அழைக்கிறோம். 

nandhiswar

திருக்காஞ்சியின் வடக்கு திசையில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியில் குளித்து விட்டு இந்த தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை வழிப்பட்டால் முன்னோர்களின் சாபங்கள் நீங்குவதுடன், செல்வ வளங்களும் பெருகும் என்பது ஐதீகம்.  இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும்  ஷோடச லிங்கத்தை வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும். பதினாறு பட்டைகள் கொண்ட இந்த சோடச லிங்கம்  அகத்திய முனிவரால் ஆவாகனம் செய்யப்பட்டது. ஏறத்தாழ 3000 வருடங்களுக்கும் மேல் பழைமையான ஆலயம் இது. சிவன் மேற்கு திசை நோக்கி சில ஆலயங்களில் தான் அமர்ந்திருக்கிறார். சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர், ஆந்திராவில் இருக்கும் காலஹஸ்தி,  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மற்றும் திருகாஞ்சியில் மட்டும் தான். 
ராகுவும், கேதுவும் வழிபட்ட தலம் என்பது கூடுதல் சிறப்பு. அதனால் ராகு மற்றும் கேது தோஷம் நீங்கவும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். 

 

ash

முன்னொரு காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியை புனித நதியான கங்கையில் சேர்ப்பதற்காக போகும் வழியில் திருகாஞ்சி என்ற இந்த ஊர் எல்லைக்கு வரும் போது அதில் உள்ள அஸ்தி பூவாக மாறியிருந்தது. மெய்சிலிர்த்து இறைவனை வேண்ட, கவலை வேண்டாம்..காசியை விட அதி சக்தி வாய்த இடம் இது’ என்று அசரீரி ஒலித்தது. அன்றிலிருந்து பக்தர்கள் காசியில் செய்யும் பித்ரு காரியங்களை இந்த ஊரில் செய்ய ஆரம்பித்தனர்.
காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரையிலும் கோயில் திறந்திருக்கிறது.