பிட்காயின் பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

 

பிட்காயின் பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

பிட்காய்ன் போன்ற கிரிப்டோகரன்சி பயன்பாடுகளுக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி: பிட்காய்ன் போன்ற கிரிப்டோகரன்சி பயன்பாடுகளுக்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிப்டோகரன்சி பயன்பாடுகளுக்கு கடந்த ஏப்ரல், 2018-ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி தடைவிதித்தது. இந்த தடை ஆணையை தற்போது உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் மூலம் வர்த்தகங்களை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தடை நீக்கம் காரணமாக ஆன்லைன் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ttn

கிரிப்டோ கரன்சி என்பது விர்ச்சுவல் பணம் ஆகும். பெரிய பணக்காரர்களும், முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் இதைத்தான் இப்போது உலகப் பொதுச் செலாவணியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மதிப்பை சர்வதேச சந்தை தான் தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.