பிடித்தவனோடு இருந்த பெண்களை  பிடித்து பலாத்காரம் செய்த போலீசார்….- காதலர்களுக்கு நடந்த கொடுமை 

 

பிடித்தவனோடு இருந்த பெண்களை  பிடித்து பலாத்காரம் செய்த போலீசார்….- காதலர்களுக்கு நடந்த கொடுமை 

வியாழக்கிழமை  20 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள்  தங்களது ஆண் நண்பர்களுடன்  ஹோட்டல் அறைக்குச் சென்றார்கள் . அப்போது அங்கே வந்த சில போலீஸ்காரர்கள் அந்த பெண்களிடம் விபச்சாரம் செய்கிறீர்களா ?உங்களை விபச்சார வழக்கில் உள்ளே அனுப்பிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் ஒரு ஹோட்டல் அறையில் தனக்கு பிடிச்சவனோடிருந்த இரண்டு பெண்களை போலிஸ்காரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

வியாழக்கிழமை  20 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள்  தங்களது ஆண் நண்பர்களுடன்  ஹோட்டல் அறைக்குச் சென்றார்கள் . அப்போது அங்கே வந்த சில போலீஸ்காரர்கள் அந்த பெண்களிடம் விபச்சாரம் செய்கிறீர்களா ?உங்களை விபச்சார வழக்கில் உள்ளே அனுப்பிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர் .அதனால் பயந்து போன அவர்களின் ஆண் நண்பர்கள் ஓடிவிட்டனர் .அதற்கு பிறகு அந்த போலீஸ் காரர்கள் அந்த பெண்களை மிரட்டி உருட்டி அடித்து  பலாத்காரம் செய்தனர் .அப்போது எங்களை விட்டுவிடும்படி கெஞ்சியும் அவர்கள் விடாமல் கொடுமை செய்தார்கள் எனவும் பிறகு ஒரு ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் அந்த பெண்கள் கூறினர் .ஆட்டோவில் வீட்டுக்கு போன பெண்கள் தங்கள் குடும்பத்தினர் உதவியுடன் போலீசில் புகார் தந்தனர் .

police-silhouette

குற்றம் நடந்த ஹோட்டல் அறையையும், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் இரண்டு போலீசாரையும் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் ஊடகங்களுக்கும்  போலீசிடமும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோரக்நாத் காவல் நிலையத்தில் அந்த இரண்டு காவல்துறையினர் மீது கும்பல் கற்பழிப்பு உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள்  கோரக்நாத் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசாரையும் இடைநீக்கம் செய்யக் கோரி மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.