பிடிகொடுக்காத ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்; எம்.பி-சீட்டுக்காக சுற்றி சுற்றி வரும் சுதீஷ்! – தே.மு.தி.க தொண்டர்கள் வேதனை

 

பிடிகொடுக்காத ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்; எம்.பி-சீட்டுக்காக சுற்றி சுற்றி வரும் சுதீஷ்! – தே.மு.தி.க தொண்டர்கள் வேதனை

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 13ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தி.மு.க எந்த குழப்பமும் இன்றி மூன்று வேட்பாளர்கள் பெயரை அறிவித்துவிட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தே.மு.தி.க-வின் சுதீஷ் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால், இருவரும் பிடிகொடுக்காமல் போக்கு காட்டி வருவது தே.மு.தி.க தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வருகிற 13ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தி.மு.க எந்த குழப்பமும் இன்றி மூன்று வேட்பாளர்கள் பெயரை அறிவித்துவிட்டது.

dmk-rajya-sabha-candidates

அ.தி.மு.க தரப்பிலோ எம்.பி பதவிக்கான போட்டி உச்சத்தில் உள்ளது. தம்பிதுரை, மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரும் சீட் கேட்டு உள்ளனர். இது போதாது என்று கூட்டணிக் கட்சிகளும் ஒரு சீட் வேண்டும் என்று நெருக்கடி அளித்து வருகின்றன. எம்.பி சீட் கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. தே.மு.தி.க வெளிப்படையாகவே சீட் கேட்டுள்ளது. இது தொடர்பாக தே.மு.தி.க-வின் சுதீஷ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருந்தார்.

dmdk-with-admk

இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) துணை முதல்வரும் அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை சுதீஷ் சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் இந்த பேச்சு வார்த்தை நீடித்தது. அப்போது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வாய்மொழியாக தே.மு.தி.க-வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும் என்று உறுதிமொழி அளிக்கப்பட்டது, அதன்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சுதீஷ் வலியுறுத்தினாராம். தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். சட்டமன்ற தேர்தலில் அவர்கள் உற்சாகமாக அ.தி.மு.க-வுக்காக வேலை செய்ய கட்டாயம் மாநிலங்களவை சீட் ஒதுக்க வேண்டும் என்றாராம். சீட் வழங்காவிட்டால் வேறு மாதிரியான முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தாராம். ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் பிடிகொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வழக்கம்போல கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று கூறி சுதீஷை அனுப்ப பாடுபட்டுள்ளார் ஓ.பி.எஸ். 
இந்த பேச்சுவார்த்தை விவரங்களை எல்லாம் சுதீஷ் தன்னுடைய அக்காவும் தே.மு.தி.க பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த்திடம் கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் வீடு தேடிவந்து ஆதரவு கேட்டது எல்லாம் மறந்துவிட்டது போல, எடப்பாடி ஆட்சியில் இருக்கவே நாம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆதரவு அளித்ததுதான் காரணம் என்று கொந்தளித்தாராம். அ.தி.மு.க தன்னுடைய வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அதுவரை அமைதி காப்போம் என்று அவரை சமாதானம் செய்துள்ளார் சுதீஷ். சீட் வழங்காவிட்டால் அ.தி.மு.க-வை விமர்சித்து அறிக்கைகள் வெளியிடத் தயார் நிலையில் இருக்கும்படி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் பிரேமலதா.