பிஜேபி சார்பாக களமிறங்கும் எம்.ஜி.ஆர் வாரிசு! 

 

பிஜேபி சார்பாக களமிறங்கும் எம்.ஜி.ஆர் வாரிசு! 

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி வழி சொந்தங்கள் ராமாவரம் தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.சொத்துத் தகராறில் விஜயன் கொலை செய்யப்பட்டது,ராமாவரத்தில் நடந்த திருட்டு போன்றவற்றில் அதிமுக அரசும் கட்சியும் தங்களைக் கைவிட்டு விட்டதாக அவர்களுக்கு வருத்தம் இருந்து வந்தது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி வழி சொந்தங்கள் ராமாவரம் தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.சொத்துத் தகராறில் விஜயன் கொலை செய்யப்பட்டது,ராமாவரத்தில் நடந்த திருட்டு போன்றவற்றில் அதிமுக அரசும் கட்சியும் தங்களைக் கைவிட்டு விட்டதாக அவர்களுக்கு வருத்தம் இருந்து வந்தது.இதில் ஜானகியின் அண்ணன் மகள்களும்,எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்கள் மூவரும் அடக்கம்.

அதில் மூன்றாவது மகள் கீதா.இவரது கணவர் மதுமோகன் மலையாள சீரியல்களில் நடித்து வருகிறார். கீதா,தனது சகோதரர், எம்ஜிஆரின் வளர்ப்பு மகன் அப்பு என்கிற ரவீந்திரனின் மனைவி நிர்மலா ஆகியோர் கடந்த 2017 ஜனவரி 17ம் தேதி பிஜேபியில் இணைந்தனர்.எம்ஜிஆரின் பிறந்த நாளான அன்று ராமாபுரம் தோட்டத்தில் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் விழா நடந்துகொண்டு இருந்த அதே நாளில் இந்த சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது. 

BJP

கீதா மோகன் உள்ளிட்டோர் கமலாலாயத்துக்கு வந்து,அன்றைய பிஜேபியின் மாநிலத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இந்த இனைப்பு நடந்தது.அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கீதா மோகன் புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழகத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது.பிரதமர் மோடி ஏற்கனவே குஜராத்தில் எம்ஜிஆர் பாணியில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்.எம்ஜிஆர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ஆகவே பிஜேபியால் மட்டுமே தமிழகத்தில் நல்லாட்சி தரமுடியும் என்று முழங்கினார். ஆனால்,அதற்குப் பிறகு அவரை ஊடகங்கள் மறந்துவிட்டன.

இந்த நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது.பிஜேபி உள்ளாட்சித் தேர்தலில் நிற்க விரும்பும் கட்சிக்காரர்களிடம் கடந்த சனிக்கிழமை முதல் விருப்பமனுப் பெற்று வருகிறது.அதைத் தொடர்ந்து பிஜேபியின் பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியனைச் சந்தித்த கீதா மோகன் பீர்க்கன்காரணை பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்பமனு தாக்கல்செய்திருக்கிறார்.நீண்ட காலத்துக்குப் பிறகு எம்ஜிஆரின் குடும்ப வாரிசு ஒருவர் தேர்தலில் குதிப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.