பிஜேபியில் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர்! 

பிஜேபியில் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பர்! 

திரைப்படத் துறையில் நடிகர் ரஜினிகாந்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் உண்டு என்றால் அவர் தெலுங்கு நடிகர் மோகன் பாபுதான்.புதிய முதலீடுகள் முதல் , குடும்ப பிரட்சினை வரை ரஜினி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது மோகன் பாபுவுடன் மட்டும்தான்.

rajini-with-mohan-babu

மோகன் பாபு கடந்த தேர்தல்வரை நேரடியாக அரசியலில் ஈடுபாடு காட்டாதவர். ஆனால்,சந்திரபாபு நாயுடுவை மட்டும் ஆதரித்து வந்தார். ஆனால், கடந்த தேர்தலின்போது ஜெகன் மோகனின் கரத்தை வலுப்படுத்துவதாகக் கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இணைந்தார். ஜெகன்மோகனின் சந்திரகிரித் தொகுதி வேட்பாளர் பாஸ்கருக்கு ஆதரவாகப் தேர்தலில் பிரச்சாரமும் செய்தார்.

இந்த நிலையில் நடிகர் மோகன் பாபு, தனது மகன் நடிகர் விஷ்னு, மகள் நடிகை லட்சுமி மஞ்சு ஆகியோருடன் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது மோகன் பாபுவுக்கு பிஜேபியில் சேரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும் , மோகன் பாபுவும் அதை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது. 

இதைத் தொடர்ந்து, ரஜினியின் நெருங்கிய நண்பரான மோகன் பாபு பிஜேபியில் இணைந்து இருப்பது, ரஜினி கேட்டுக்கொண்டதால் தான் என்றும், இது ஒரு முன்னோட்டம் என்றும் பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மோகன் பாபு பிஜேபியில் இணைந்த விவகாரம் தமிழகத்திலும் ஆந்திராவிலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.