பிச்சையெடுத்து ரூ.6 கோடி சம்பாதித்த பெண் ! பிச்சை போட்டவர்கள் அதிர்ச்சி !

 

பிச்சையெடுத்து ரூ.6 கோடி சம்பாதித்த பெண் ! பிச்சை போட்டவர்கள் அதிர்ச்சி !

லெபானான் நாட்டில் பிச்சை எடுத்து ஒரு பெண் வங்கிக் கணக்கில் 6 கோடி ரூபாய் சேர்த்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

லெபானான் நாட்டில் பிச்சை எடுத்து ஒரு பெண் வங்கிக் கணக்கில் 6 கோடி ரூபாய் சேர்த்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

லெபனான் நாட்டில் சீதோன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையின் வாசலில் தினமும் பிச்சை எடுத்து வரும் பெண், ஹஜ் வாபா முகமது அவத். பெண் வறுமையில் வாடுவதால் மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளும், பொதுமக்களும் அவ்வப்போது பிச்சை போட்டு வந்தனர். பிச்சையில் கிடைக்கும் பணத்தை சாப்பாடு உள்ளிட்ட செலவுகள் போக மீதியை என்ற வங்கியில் சேமித்து வைத்துள்ளார்.

beg

இந்த நிலையில் ஜே.டி.பி. வங்கியின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததையடுத்து, அந்த வங்கி சமீபத்தில் மூடப்பட்டது. இந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்துக்கு அந்நாட்டு ரிசர்வ் வங்கி உறுதி அளித்தது. அவர்களுக்குரிய பணம் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரியாத் சலாமே கூறினார்.

ஆனாலும் வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணம் திரும்ப கிடைக்கும் என அந்நாட்டு அரசு உறுதி அளித்திருந்தது. இதற்கிடையே கடந்த புதனன்று லெபான் மத்திய வங்கியில் இருந்து மருத்துவமனை வாசலில் பிச்சை எடுக்கும் வாஃபா முகமது அவத்துக்கு 2 காசோலைகள் வந்துள்ளது. அதில் இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 37 லட்ச ரூபாய் இருந்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 10 வருடமாக மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து வந்த பெண் கோடீஸ்வரி என்பது ஆச்சரியமாக உள்ளதாக அங்க இருப்பவர்கள் தெரிவித்தனர்.