பிச்சைக்காரர் வேஷம் போட்ட வேட்பாளருக்குக் கொலை மிரட்டல்! பாதுகாப்பு கேட்டு மனு

 

பிச்சைக்காரர் வேஷம் போட்ட வேட்பாளருக்குக் கொலை மிரட்டல்! பாதுகாப்பு கேட்டு மனு

தருமபுரியில் பிச்சைக்காரர் வேடம் போட்டு வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரம் செய்து வரும் வேட்பாளரை சக வேட்பாளர்கள் மிரட்டியதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசில் மனு செய்துள்ளார்.

தருமபுரியில் பிச்சைக்காரர் வேடம் போட்டு வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரம் செய்து வரும் வேட்பாளரை சக வேட்பாளர்கள் மிரட்டியதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசில் மனு செய்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எச்சனஹள்ளி ஊராட்சி மன்றத் தேர்தல் தலைவர் பதவிக்கு முனி ஆறுமுகம் என்பவர் போட்டியிடுகிறார். மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அவர், பிச்சைக்காரர் வேடம் போட்டு வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் அளிக்கும் தவறான முறை பற்றி பிரசாரம் செய்தபடி பிச்சை எடுத்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும், அதே வேடத்தில் வீடு வீடாக சென்று தன்னை தேர்ந்தெடுக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார். 

muni

இவரது பிச்சைக்காரர் வேடம் வேலை செய்ய ஆரம்பித்தது. மீடியாக்களில் இவரைப் பற்றி செய்தி வெளியானது. இதனால், அந்த ஊராட்சி பகுதியில் அனைவருக்கும் தெரிந்தவர் ஆனார். இதனால், எரிச்சலடைந்த மற்ற வேட்பாளர்கள் இவர் மீது கடுப்பில் உள்ளனர். இந்தநிலையில் பிச்சைக்காரர் வேடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவரை, மற்ற இரண்டு வேட்பாளர்கள் வழிமறித்து மிரட்டியுள்ளனர். பிச்சைக்காரன் வேஷம் போட்டு வாக்கு சேகரித்தால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், போன் மூலமாகவும் இவருக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறதாம்.

police

இதனால், தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பென்னாகரம் போலீஸ் மற்றும் பென்னாகரம் பகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தார். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்க வந்தார். ஆனால், அவரை அதிகாரியை சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனால், போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனுவை அளிக்க அனுமதிக்கப்பட்டது. 
பிச்சைக்காரர் வேடம் அணிந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர் ஒருவர் தகராறு செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.