பிசி சாதனங்களுக்கான புரொஜெக்ட் எக்ஸ் கிளவுட் – தயார் நிலையில் மைக்ரோசாப்ட்

 

பிசி சாதனங்களுக்கான புரொஜெக்ட் எக்ஸ் கிளவுட் – தயார் நிலையில் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் பிசி சாதனங்களுக்காக எக்ஸ் கிளவுட் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

சான் பிரான்சிஸ்கோ: மைக்ரோசாப்ட் நிறுவனம் பிசி சாதனங்களுக்காக எக்ஸ் கிளவுட் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.

விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான ‘ப்ராஜெக்ட் எக்ஸ் கிளவுட்’ கேம் ஸ்ட்ரீமிங் சேவையை மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தாண்டு கூடிய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதற்கான ஏற்பாட்டை முழுவதுமாக தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த சேவை குறித்து கடந்தாண்டே மைக்ரோசாப்ட் அறிவிப்பை வெளியிட்டது.

ஸ்ட்ரீமிங் சேவையின் மூலம் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் தலைப்புகளுடன் உங்களுக்கு சொந்தமான எந்த கேமையும் விளையாடக் கூடிய வசதி இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.