பிசிசிஐ தலைவராக பதவியேற்றார் கங்குலி!

பிசிசிஐ தலைவராக பதவியேற்றார் கங்குலி!

பிசிசிஐ புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

கடந்த 2016ஆம் ஆண்டு பிசிசிஐ-யில் சட்டத்திற்குப் புறம்பாக சில முறைகேடுகள் நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு ஒன்றை அமைத்து, அளிக்கப்பட்ட புகார்களில் இருக்கும் உண்மையை ஆராயவும் சில பரிந்துரைகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தது. 

saurav ganguly

உச்சநீதிமன்ற குழுவின் பரிந்துரைகளை பிசிசிஐ கடைபிடிக்கவில்லை. இதனால் பிசிசிஐயின் தலைவராக இருந்த அனுராக் தாக்கூர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இடைப்பட்ட காலங்களில் பிசிசிஐ-யை வழிநடத்த உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை படி, புதிய நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. பிசிசிஐ தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவிக்கு வந்தவுடன் இந்த குழுவானது தாமாக பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி விண்ணப்பித்திருந்தார். இவரை தவிர வேறு எவரும் இப்பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆதலால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் திட்டமிட்டபடி 23ஆம் தேதி பதவியேற்கப்பட இருந்தது. 

அதற்கேற்றார் போல், இன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிசிசிஐ தலைவராக அடுத்த ஒன்பது மாதங்களுக்கு இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

துணைத்தலைவராக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெ ஷா தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். பொருளாளராக முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தம்பி அருண்குமார் பதவியேற்றுக்கொண்டார். இணைச் செயலாளராக கேரளாவைச் சேர்ந்த ஜெயஷ் ஜார்ஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பிசிசிஐ தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் ஐசிசியின் பிரதான வர்ணனையாளர் பொறுப்பு, ஐபிஎல்-லில் டெல்லி அணிக்கு ஆலோசகர் பொறுப்பு மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்பு ஆகியவற்றில் இருந்து விலகிக்கொண்டார் கங்குலி.

-vicky