பிங்க் நிறப்பந்து.. வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட்.. வங்கதேசம் முதலில் பேட்டிங்!

பிங்க் நிறப்பந்து.. வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட்.. வங்கதேசம் முதலில் பேட்டிங்!

கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி20 தொடரை முடித்தபிறகு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

india

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்படும் பகல் இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டிக்கான முதல் இன்னிங்சில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இன்றி சென்ற போட்டியில் களமிறங்கிய அதே 11 வீரர்கள் மீண்டும் களம் இறக்க படுகின்றனர். 

அதேநேரம் வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அல்-அமீன் வெளியில் அமர்த்தப்பட்டு தேஜுல் உள்ள எடுத்து வரப்பட்டுள்ளார். நசீம் ஹாசன் மேய்தி ஹாசனுக்கு பதிலாக உள்ளே வந்துள்ளார். 

india

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்:

மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேதேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா (கீப்பர்), உமேஷ் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா

இன்றைய போட்டிக்கான வங்கதேச அணியின் வீரர்கள் பட்டியல்

ஷாட்மான் இஸ்லாம், இம்ருல் கயஸ், மோமினுல் ஹக் (கேப்டன்), முகமது மிதுன், முஷ்பிகூர் ரஹீம் (கீப்பர்), மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், நயீம் ஹசன், அபு ஜெயத், அல்-அமீன் ஹொசைன், எபாதத் ஹொசைன்