‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ்…ஹீரோ யாருன்னு தெரியுமா?

 

‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நிவேதா தாமஸ்…ஹீரோ யாருன்னு தெரியுமா?

தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து போனி கபூர்  தயாரிக்கிறார். இப்படத்திற்கு  தமன் இசையமைக்கிறார்.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற  திரைப்படம் பிங்க்.  இதையடுத்து  ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை வாங்கினார் போனி கபூர். அதன் பிறகே  தமிழில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் உருவாகி வெற்றி படமாக அமைந்தது.

ttn

இந்நிலையில் இப்படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக்காகவுள்ளது. அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த நடிகர்  பவன் கல்யாண், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்குள் நுழைகிறார். இயக்குநர் . ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் உருவாகவுள்ள  இப்படத்தைத் தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைந்து போனி கபூர்  தயாரிக்கிறார். இப்படத்திற்கு  தமன் இசையமைக்கிறார்.

ttn

இதில் டாப்ஸி கதாபாத்திரத்தில்  நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனத் தெரிகிறது.