பிக் பாஸ் 3: வழக்கம் போல் மக்களுக்குப் புரியாமல் பேசிய கமல் 

 

பிக் பாஸ் 3: வழக்கம் போல் மக்களுக்குப் புரியாமல் பேசிய கமல் 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து ரசிகர்களைக் கவரும் வகையில் புரமோ விடீயோக்கள் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் புரோமோவில் காட்டப்படுவது நிகழ்ச்சியில் காட்டுவது இல்லை என்று ரசிகர்கள் ஒரு குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் வார கடைசி நாள் என்பதால் இன்றும் நாளையும் கமல்ஹாசன் ஹவுஸ் மேட்ஸ்யுடன் உரையாற்றுவார். அதனால் நிகழ்ச்சியில் கூடுதல் சுவாரஸ்யம் இருக்கும். தற்போது இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது. 

அதில் கமல்ஹாசன்  வழக்கம்போல் மக்களுக்கு புரியாமல் பேசியுள்ளார். ‘தன் நிலை உணர வேண்டும், தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும், தைரியமாகச் செயல்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் என்ன நடக்கும் என்பதை இத்தனை நாட்களாகப் பார்த்து வந்தோம். இப்போது நாமும் இருக்கின்றோம் என்பதை நினைவுபடுத்தும் நேரம் வந்துவிட்டது’ என்று கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் புரிமையால் பேசி குழப்ப ஆரம்பித்து விட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.