பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா? நடிகை சாந்தினி ஓபன் டாக்!

 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேனா? நடிகை சாந்தினி ஓபன் டாக்!

நடிகை சாந்தினி தான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவதாகப் பரவிவந்த செய்திக்கு விளமக்களித்துள்ளார்.

சென்னை: நடிகை சாந்தினி தான் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவதாகப் பரவிவந்த செய்திக்கு விளமக்களித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.  பிக் பாஸ் தமிழ் சீசன் 1, சீசன் 2 என ஒளிபரப்பான இரண்டு நிகழ்ச்சிகளையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 

தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள கமல்ஹாசன், ‘பிக் பாஸ்’ சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில்  இவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் புரொமோக்கான ஷூட்டிங் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

chandhini

அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில், அதில் முதல் போட்டியாளராகப் பிரபல நடிகை சாந்தினி தமிழரசன் வர  வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவர் கூறியதாவது, பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பற்றி தற்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அதில் கலந்து கொள்ளலாமா? வேண்டாமா? என நான் இன்னும் முடிவு செய்யவில்லை. என் கையில் இருக்கும் படங்களைச் சொன்ன தேதியில் முடித்துக் கொடுக்க வேண்டும். எனவே, இப்போதைக்கு இந்தச் செய்தியில் உண்மையில்லை’ என்று கூறியுள்ளார். 

முன்னதாக நடிகை சாந்தினி மன்னர் வகையறா, வஞ்சகர் உலகம், பில்லா பாண்டி, ராஜாரங்கூஸ்கி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது.