பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நானா? பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பவர் ஸ்டார்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நானா? பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பவர் ஸ்டார்

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன்காக மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். 

அந்த வகையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியானது. கடந்த இரண்டு சீசன்களில் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது இந்த ப்ரோமோ மூலம் உறுதியானது. அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இந்த தகவலை மறுத்தனர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை தொடர்ந்து மூன்று முறை அழைத்ததாகவும் ஒரு சில காரணங்களால் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று நடிகை பூஜா தேவரியா கூட தெரிவித்தார்.

அந்த வகையில் இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இது பற்றி பிரபல ஊடகத்திற்கு பேட்டியளிக்கயில்,’எனக்கு கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து  கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் கலந்து கொள்ளாமல் முடியவில்லை. அதேபோன்று இந்த முறையும் எனக்கு அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால் நான் அவர்களுக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை’ என்று கூறியுள்ளார். இதில் இருந்து பவர் ஸ்டார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.