பிக் பாஸ் 3 தமிழ்: டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெல்லப்போவது யார்?

 

பிக் பாஸ் 3 தமிழ்: டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெல்லப்போவது யார்?

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பிக் பாஸ் போட்டியிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார்.

bb

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், இந்தா வாரம் டிக்கெட் டூ பினாலே தொடங்கியுள்ளது. அதில் இந்த வாரம் முழுவதும் நடைபெறும் டாஸ்கில் யார் முதலிடத்தில் இருக்கிறாரோ அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார் என்று பிக் பாஸ் அறிவிக்கிறார். அந்த போட்டியின் போது, 80 நாளா எனக்கு புரியாதது இப்போ  என்ன புதுசா புரிய போது? என்று சாண்டியிடம் கவின் கூற, அதற்குச் சேரனோ, இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல, இதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க என்று கூறுகிறார். 

 

முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகன் இந்த டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அதே போல பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில்  ஜனனி வெற்றி பெற்றார். தற்போது இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.