பிக் பாஸ் 3யில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த திருநங்கை போட்டியாளர்! 

 

பிக் பாஸ் 3யில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த திருநங்கை போட்டியாளர்! 

தமிழில் பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகி விட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடா போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. 

அந்த வகையில் தெலுங்கில் சமீபத்தில்  பிக்பாஸ் 3 சீசன் தொடங்கியது. அதை நாகார்ஜூனா தொகுத்து வழங்கவுள்ளார். அதில் திருநங்கையான தமன்னா சிம்ஹாத்ரி என்பவர் நேற்று வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்துள்ளார். நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகையான இவர், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மங்களகிரி தொகுதியில் போட்டியிட்டார்.

tamanna simhadri

மேலும் தெலுங்கு தொலைக்காட்சியில் பல விவாத நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.