பிக் பாஸ் 3யின் வெற்றியாளர் இவர் தான்: முன்னாள் போட்டியாளர் ஓபன் டாக்!

 

பிக் பாஸ் 3யின் வெற்றியாளர் இவர் தான்: முன்னாள் போட்டியாளர் ஓபன் டாக்!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாரகள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த புதுசில் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்பது போல் சந்தோஷமாக இருந்தது. ஆனால் தற்போது நாட்கள் செல்ல செல்ல இவர்கள் சண்டை போடுவதற்கு அளவே இல்லாமல் செல்கிறது. 

இதை பார்த்த ரசிகர்கள் கடந்து இரண்டு சீசனே மேல் என்று கருத்து கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க அதில் லாஸ்லியா மட்டும் மற்ற ஹவுஸ் மேட்ஸ் போல் இல்லாமல் மிகவும் சாந்தமாக வலம் வருகிறார். மேலும் தனது சிறுசிறு குறும்பு தனம் மூலம் ரசிகர்களின் மனத்தையும் கொள்ளையடித்துள்ளார். அதையொட்டி பலரும் இவர் தான் வெற்றியாளர் என்று கூறிவருகின்றனர். 

ponnambalam

அந்த வகையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் பொன்னம்பலம் பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் பிக் பாஸ் 3யின் வெற்றியாளர் யாராக இருக்க முடியும் என்று கேள்வி கேட்கப்பட்டது. 

los

அதற்கு அவர் கூறியதாவது, ‘சேரன் லாஸ்லியாவை நாமினேட் செய்தது அனைவருக்கும் கேள்வியாக இருக்கும். ஆனால், இந்த நமினேஷன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இலங்கை மக்கள் லாஸ்லியாவுக்கு  பேராதரவு தரப்போறாங்க. கண்டிப்பா Finals-ல் லாஸ்லியா இடம் பெறுவார்’ என்று கூறியுள்ளார்.