பிக் பாஸ் 2: பைனல்ஸ் வாரத்துக்கு செல்ல புது டாஸ்க்!

 

பிக் பாஸ் 2: பைனல்ஸ் வாரத்துக்கு செல்ல புது டாஸ்க்!

பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சிறப்பு டாஸ்க்காக டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சிறப்பு டாஸ்க்காக டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பைனல்ஸ் வாரத்துக்கான போட்டியாளர் தேர்வு இன்று நடைபெறுகிறது.

ஆரவ் தலைமையில் நடக்கும் இந்த டாஸ்க் என்னவென்றால், போட்டியாளர்கள் கையில் ஒரு கோப்பை நிறைய தண்ணீர் கொடுத்து, ஒருவர் பின் ஒருவராக சுற்றி வர வேண்டும். கோப்பையில் உள்ள தண்ணீர் குறைவாக சிந்திய போட்டியாளர்கள் பைனல்ஸ் வாரத்துக்கு நேரடியாக செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேட்க ஈசியாக இருந்தாலும், செய்யும் போது தான் இதன் கஷ்டம் தெரியும். இப்படி ஒரு டாஸ்க்கை போட்டியாளர்களுக்கு வழங்கி அவர்களை சோதிக்கிறார் பிக் பாஸ்.