பிக் பாஸ் 2: தமிழ் மக்கள் முட்டாள் இல்லை – ஐஸ்வர்யாவை ரவுண்டுக்கட்டிய விஜி!

 

பிக் பாஸ் 2: தமிழ் மக்கள் முட்டாள் இல்லை – ஐஸ்வர்யாவை ரவுண்டுக்கட்டிய விஜி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வைல்ட் கார்ட் கலகத்தை இனிதே துவக்கியுள்ளார் விஜயலக்ஷ்மி.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வார எவிக்‌ஷன் நாமினேஷன் விறுவிறுப்பாக துவங்கியது. இதுவரை எவிக்‌ஷனுக்கே வராமல் தோழியின் உதவியால் தப்பித்து வந்ததாக கூறப்படும் ஐஸ்வர்யாவை நாமினேஷனில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் களமிறக்கியுள்ளனர்.

 

இந்நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜயலக்ஷ்மிக்கு பிக் பாஸ் 2 பைனல்ஸ்க்கு செல்லும் தகுதியில்லை என யாஷிகா, மும்தாஜ் போன்றவர்கள் கூறினர். புதிதாக வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுக்கு அவ்வப்போது நறுக் நறுக் குட்டுக்களை சிரித்துக் கொண்டே வழங்கிய விஜி, தற்போது தனது ஆட்டத்தை ஆடத் தொடங்கியுள்ளார்.

பிக் பாஸ் 2: தமிழ் மக்கள் முட்டாள் இல்லை - ஐஸ்வர்யாவை ரவுண்டுக்கட்டிய விஜி!

 

இன்றைய நிகழ்ச்சி குறித்த புரொமோ வீடியோவில், தமிழ்நாட்டு மக்கள் பற்றிய விவரத்தை வடநாட்டு நாயகிக்கு விஜயலக்ஷ்மி எடுத்துரைக்கிறார். உங்களுக்கு தமிழ் நாட்ட பத்தி தெரியுமா தெரியாதா தெரியாது.. எல்லாத்தையும் அரவணைப்பாங்க.. பிடிச்சிருச்சினா தலைல தூக்கி வச்சிப்பாங்க.. அதுக்காக அவங்க ஒண்ணும் முட்டாள் இல்லை..’ என்று கூறி ஐஸ்வர்யாவுவை விஜயாக்ஷ்மி கதறவிடுகிறார்.

அய்யோ செம்ம சண்டை என வெளியே வந்து ஆட்டம் போடும் விஜயலக்ஷ்மி, தன் பங்கிற்கு வைல்ட் கார்ட் கலகத்தை பிக் பாஸ் வீட்டில் ஆரம்பித்துள்ளார். இந்த வாரத்தில் ஐஸ்வர்யா, யாஷிகா, மும்தாஜை டார்கெட் செய்ய மற்ற ஹவுஸ்மேட்ஸ் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஷாரிக், மகத், டேனி போன பிறகு சிறகொடிந்து இருக்கும் ஐஸ்வர்யா, யாஷிகாவுக்கு அன்புடன் ஆதரவு கரம் நீட்டுகிறார் மும்தாஜ்.

பாச பிணைப்புக்கு ஆப்பு வைக்கும் விதமாக அனைவரது கோபமும் மும்தாஜ் மீதூ திரும்பியுள்ளது. வீட்டில் கோவக்கார பார்ட்டி எல்லாம் வெளியே போய்விட்ட நிலையில், ஐஸ்வர்யா மட்டும் போதும் என பிக் பாஸ் நினைத்துவிட்டார் போல..