பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் இவர் தான்!: கசிந்தது தகவல்!

 

பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் இவர் தான்!: கசிந்தது தகவல்!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இறுதி தருணத்தை எட்டியுள்ளது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் இறுதிப்போட்டியில் உள்ளனர்.  

biggbossfinals

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே போலித்தனமும், நடிப்பும் போட்டியாளர்களிடம் இருப்பதாக மக்கள் மனதில் கருத்துக்கள் இருந்தன. பின்னர் அது சற்று மாறி, இந்த சீசனின் போட்டியாளர்களின் பலம் மற்றும் பலவீனத்தை மக்கள் புரிந்துக் கொண்டனர். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் தங்களது ஆதரவினை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளித்து வந்தனர்.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று நடிகை ரித்விகா பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே அமைதியாக, எதிலும் பெரிதாக பங்குபெறாமல் இருந்ததாக கருதப்பட்ட ரித்விகா, பின்னர் இது தான் கேம் என்பதை புரிந்துக் கொண்டு நிதானமாக விளையாடி மக்கள் மனதை வென்றிருக்கிறார்.

rithvika

பிக் பாஸ் வீட்டில் ரித்விகா சேஃப் கேம் ஆடுவதாகவும், டாஸ்க்குகளில் சரியாக பங்கேற்கபதில்லை என்ற பெயரையே சம்பாதித்த ரித்து, நாளடைவில் தவறுகளை தட்டிக் கேட்டும், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதத்தில் தனது கருத்துக்களை நேரடியாக பேசியும் மக்களை கவர்ந்தார். பிக் பாஸ் போட்டியில் ஒருவரை பற்றி புறம்பேசாத போட்டியாளராக கடைசி வரை தொடர்ந்த ரித்து, நேர்மையான போட்டியாளராகவும் பார்க்கப்பாட்டார்.

rithvika

இந்த சீசனில் மிகச்சரியாக விளையாடி இந்த வெற்றியை பெற்றுள்ளார். பிக் பாஸ் 2 டைட்டிலை வென்ற ரித்விகாவிற்கு வாழ்த்துக்கள்.