பிக் பாஸ் 2: ஜனனிக்காக மொட்டையடித்துக் கொண்ட பாலாஜி!

 

பிக் பாஸ் 2: ஜனனிக்காக மொட்டையடித்துக் கொண்ட பாலாஜி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி கேட்டுக் கொண்டதற்காக பாலாஜி மொட்டையடித்துக் கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 28 நாட்களே மீதமுள்ள நிலையில், போட்டிகளை கடுமையாக்கப்பட்டு வருகிறது. இறுதிச்சுற்றுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் பிக் பாஸ் களமிறங்கியுள்ளார்.

 

இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான புரொமோ வீடியோவில், தன்னை காப்பாற்றிக் கொள்ள பாலாஜியை சமாதானப்படுத்தி அவரை மொட்டையடித்துக் கொள்ளுமாறு கேட்கிறார். தனது மகள் கேட்பது போல் நினைத்துக் கொண்டு மொட்டையடித்துக் கொள்கிறேன் என பாலாஜி கூறியதும், ஜனனியும், விஜியும் பாலாஜியை அன்பால் கட்டித்தழுவிக் கொண்டனர்.

 

பிக் பாஸ் 2: ஜனனிக்காக மொட்டையடித்துக் கொண்ட பாலாஜி!

மும்தாஜின் தாய்ப்பாசத்தை அன்பு மட்டுமே போதாது என கருத்துக் கூறியவர்க இன்று பாலாஜியை கட்டித்தழுவுவது சரியா? பிக் பாஸ் வீட்டில் மீண்டும் பாசப் போராட்டம் துவங்கிவிட்டதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.