பிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்! எதுக்குனு தெரியுமா?

 

பிக் பாஸ் வைஷ்ணவியை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்! எதுக்குனு தெரியுமா?

பிக் பாஸ் வைஷ்ணவி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்

சென்னை: பிக் பாஸ் வைஷ்ணவி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக வலம்வந்தவர் வைஷ்ணவி பிரசாத். பிக் பாஸ் வீட்டில் வைஷ்ணவி  சக போட்டியாளர்கள் பற்றி புறம் பேசுவதாக ஏகத்துக்கும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றித் தனி அறையில் தங்க வைக்கப்பட்ட  அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனாலும் அவரது யுக்தி எதுவும் பலிக்காததால் எலிமினேட் செய்யப்பட்டார்.எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வைஷ்ணவிக்கு என தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இந்நிலையில்,சமூகவலைதளபக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் வைஷ்ணவி, தற்போது  “நீல நிற உடை மற்றும் நீல நிற லிப்ஸ்டிக் போட்டு ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பார்த்து அவரது ரசிகர்கள் வைஷ்ணவியை சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

vaishnavi fans