பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? 

 

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? 

சென்னை: பிக் பாஸ் 3யில் இந்த வாரம் யாரு எலிமினேட் ஆகவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் மூன்றாவது சீசன் தொடங்கி 60வது நாட்களைக் கடந்துள்ளது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி மற்றும் வனிதா நுழைந்துள்ளனர். 

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சேரன், கஸ்தூரி,சாண்டி மற்றும் தர்ஷன் ஆகிய 4 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் யார் வெளியேறவுள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த நான்கு பேரில் மக்களிடம் குறைவான வாக்குகளைப் பெற்று கஸ்தூரி வெளியேறவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த இவர் இதுவரை பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே அதனால் இவர் வெளியேறுவதற்குப் பெரிய அளவில் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.