பிக் பாஸ் வீட்டை கண்ணீரால் கழுவி மொழுகினீங்க..! ஃப்ரீஸ் டாஸ்கை நக்கலடித்த கமல்!

 

பிக் பாஸ் வீட்டை கண்ணீரால் கழுவி மொழுகினீங்க..! ஃப்ரீஸ் டாஸ்கை நக்கலடித்த கமல்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சென்ற வாரம் கொடுக்கப்பட்ட ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது, கண்ணீரால் பிக் பாஸ் வீட்டையே போட்டியாளர்கள் குளமாக்கியது குறித்து கமல்ஹாசன் நக்கலடித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துள்ள நிலையில், இறுதிக்கட்டத்தை நோக்கி செல்வதாக கமல்ஹாசன் நினைவுக் கூர்ந்துள்ளார். இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக வெளியான புரொமோ வீடியோவில், பிக் பாஸை போல் கமல்ஹாசனும் போட்டியாளர்களுக்கு ஃப்ரீஸ் டாஸ்க்கினை வழங்கினார்.

அத்துடன், என்ன எல்லாரும் சிரிச்சிட்டே இருக்கீங்க, போன வாரம் பிக் பாஸ் வீட்டையே கழுவி மொழுகுற அளவுக்கு கண்ணீரவிட்டீங்க..?இந்த பாசமும் கண்ணீரும் நீடிக்குமா பார்ப்போம்.. இந்த 9 பேர் 8 பேரா குறைய போறாங்க.. இறுதிக்கட்டத்தை நோக்கி பிக் பாஸ் என கூறி, போட்டியாளர்களை ஃப்ரீஸ் மோடிலேயே விட்டுச் செல்கிறார்.

அழுகாச்சி வாரத்தை கமல்ஹாசனாவது மாற்றி விறுவிறுப்பை கூட்டுவாரா அல்லது, அவரும் அழுகாச்சிக்கு வழிவகுப்பாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.