பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த தர்ஷன் அம்மாவுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

 

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த தர்ஷன் அம்மாவுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை:  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

tharshan

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 81 வது நாளை தொட்டுள்ளது. பிக் வீட்டில் இரண்டு நாட்களாக  ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. முகினின்  அம்மா நிர்மலா மற்றும் தங்கை ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்திருந்ததைத் தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவின்  குடும்பத்தினர் வந்திருந்தனர்.

 

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சியான முதல் புரொமோ  தற்போது வெளியாகியுள்ளது. அதில், காலையில் தினமும் கண்விழித்தால் பாடல் ஒலிக்க, தர்ஷனின் அம்மா உள்ளே வருகிறார். அவரை கண்டதும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டார் தர்ஷன். இதையடுத்து தர்ஷன் அம்மாவின் பிறந்தநாளை ஹவுஸ்மேட்ஸ் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இவ்வாறாக இந்த புரொமோ  வீடியோ முடிகிறது. இன்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் குடும்பம் விடைபெற்றுச் செல்வதும் ஒளிபரப்பாகும் என்றே தெரிகிறது.