பிக் பாஸ் வீட்டுக்குள் பத்திரிகையாளர்கள்: சரமாரி கேள்வியால் தடுமாறும் சாண்டி

 

பிக் பாஸ் வீட்டுக்குள் பத்திரிகையாளர்கள்:  சரமாரி கேள்வியால் தடுமாறும் சாண்டி

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் போட்டி முடிய ஒருவார காலமே உள்ள நிலையில் இன்று 100வது நாளை தொட்டுள்ளது.  இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  மேலும்  பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று சாக்ஷி, கஸ்தூரி, வனிதா, அபிராமி, சேரன்  ஆகியோர்  ஆகியோர் வந்துள்ளனர்.

bb

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பத்திரிகையாளர்கள் சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து ஹவுஸ்மேட்ஸிடம் கேள்வி கேட்கின்றனர்.

 

அப்போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் சாண்டியிடம், ‘நீங்க என்ன தான் பீல் பண்ணி அழறேன்னு ஒத்துக்கிட்டாலும், கொஞ்சம் கேம்ம சேஃப்பா விளையாடுறீங்களோ?’ என்று கேட்க, அதற்கு சாண்டியோ, ‘என்ன பொறுத்தவரைக்கும் ஜாலியா இருக்கணும், நான் வெளியில என்ன பண்ணுறேன்னோ அது தான். அத நீங்க ஸ்டார்ட்டர்ஜியா எடுத்துக்குறதா இருந்தாலும் எடுத்துக்கலாம். நீங்க என்ன போடுறததா இருந்தாலும் போட்டுக்கலாம்.

sandy

நான் பண்ணுறது அதுதான்னா, அது அதுவா கூட இருக்கலாம். எனக்கு அது பிரச்னை இல்ல. யாருக்கு வேணும்னாலும் போடுங்கப்பா. எனக்கு ஒன்னும் பிரச்னையில்லை. ஏன்னா பொறுத்தவரைக்கும் ஜாலியா இருக்கணும். செம்மயா இருக்கணும்’ என்று கூறுகிறார்.