பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சேரன்: அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ்!

 

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சேரன்: அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ்!

சேரன் மட்டும் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு வீட்டினுள் நடப்பதைக் கவனித்து வருகிறார்.

சென்னை:  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 80 வது நாளை தொட்டுள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் சேர்த்து 8 பேர் உள்ளனர். இதில் சேரன் மட்டும் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு வீட்டினுள் நடப்பதைக் கவனித்து வருகிறார். குறிப்பாக நேற்று கவின் மற்றும் லாஸ்லியாவுக்கு கடிதம் எழுதி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

bb

இந்நிலையில்  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பிக் பாஸ் எல்லோரும் ஃப்ரீஸ் என்று சொல்ல, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சேரன் நுழைகிறார். சேரனை பார்த்ததும் வீட்டில் உள்ள அனைவரும் துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கின்றனர். அப்போது வனிதா, ‘எல்லாத்தையும் பார்த்துட்டு ஒட்டுகேட்டுட்டு கேள்வி வேற கேட்குறீங்க பயங்கரமா’ என்று சொல்ல, தர்ஷன் அவரை தூக்கிக்கொண்டு சுற்றுகிறார். 

 

கவின்-லாஸ்லியா  தங்களது காதல் குறித்து சீக்ரெட் ரூமில் இருக்கும் போதே கேள்வி எழுப்பிய சேரன் தற்போது மீண்டும் வீட்டுக்குள் வந்திருப்பது நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்யமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.