பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழையும் மமதி சாரி: ஆணவம், அழுகை எல்லாமே வெளிவந்துடுச்சி: புரொமோ வீடியோ!

 

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழையும் மமதி சாரி: ஆணவம், அழுகை எல்லாமே வெளிவந்துடுச்சி: புரொமோ  வீடியோ!

பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இன்று அனந்த் வைத்தியநாதன், மமதி சாரி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்கு  வருவதாக புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

சென்னை: பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இன்று அனந்த் வைத்தியநாதன், மமதி சாரி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்கு  வருவதாக புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இறுதி போட்டிக்காக ஐஸ்வர்யா, விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஜனனி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நித்யா, மஹத், ஷாரிக்,யாஷிகா உள்ளிட்ட பலர் சர்ப்ரைஸ் விசிட் அடித்தனர்.இந்நிலையில் இன்று  அனந்த் வைத்தியநாதன், மமதி சாரி, பாலாஜி உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதாக புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரொமோவில், ‘பாலாஜியோட மாற்றம் தான்  என்னால நம்பமுடியல, வெளியில வந்தீங்கன்னா உங்களுக்கு தெரியும் உங்க ஃபேன்ஸ் ஃபாலோயிங் எப்படி இருக்குன்னு என்று சொல்லும் அனந்த்  வைத்தியநாதன்  பாலாஜியை பார்த்து எப்படி இருந்தது எவ்ளோ லேடீஸ் மத்தியில இருக்கும் போதுன்னு என்று கேட்கிறார். அதை தொடர்ந்து பேசும் மமதி ஆத்திரம் , அழுகை, ஆவேசம், ஆதங்கம், ஆணவம் எல்லாமே வெளிய வந்துடுச்சு என்று தனக்கே உரிய பாணியில் சொல்கிறார். இறுதியாக எப்படி இவ்ளோ நாள் பைத்தியம் பிடிக்காம இருக்கீங்க என்று சொல்லி சிரிக்கிறார் அனந்த் வைத்தியநாதன்.

 

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து ஹவுஸ்மேட்ஸ்  சந்திப்பது அவர்களைப் பற்றி கூறிச் சிலாகிப்பது என இந்த வாரம் முழுக்க ஒரே பாச மழை எபிசோட்டாக செல்கிறது.