பிக் பாஸ் வீட்டில் சாண்டி நடவடிக்கை குறித்து முன்னாள் மனைவி ட்வீட்! 

 

பிக் பாஸ் வீட்டில் சாண்டி நடவடிக்கை குறித்து முன்னாள் மனைவி ட்வீட்! 

பிக் பாஸ் வீட்டில் சாண்டியின் நடவடிக்கை எப்படி உள்ளது என்பது குறித்து அவரின் முன்னாள் மனைவி பதிவு வெளியிட்டுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் வீட்டில் சாண்டியின் நடவடிக்கை எப்படி உள்ளது என்பது குறித்து அவரின் முன்னாள் மனைவி பதிவு வெளியிட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பயங்கரமாக விமர்சனம் செய்து நடனமாடியவர் சாண்டி. அவரே இந்த முறை நேராக பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்து விட்டார். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்துள்ளார். 

இவரின் குணத்தின் மூலம் இவருக்கு என்றே ஒரு சில அர்மிகள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் தற்போது சாண்டி செய்யும் குறும்புத் தனத்தைக் குறித்து அவரின் முன்னாள் மனைவியும், பிக் பாஸ் 2வின் போட்டியாளருமான காஜல் அடிக்கடி ட்வீட் ஒன்றை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சாண்டியின் நடவடிக்கை குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அவரின் நகைச்சுவை உணர்வை மிகவும் நேசிக்கிறேன். பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் அவராகவே இருக்கிறார்’ என்று சாண்டி நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.