பிக் பாஸ் வீட்டில் அபிராமி சேர்க்கை சரியில்ல – அஜீத் ரசிகர்கள் காட்டம்!

 

பிக் பாஸ் வீட்டில் அபிராமி சேர்க்கை சரியில்ல – அஜீத் ரசிகர்கள் காட்டம்!

சிம்ரன் போஸ்டரையே நாங்கெல்லாம் மூணு மணி நேரம் பார்ப்போம்கிற மாதிரி, அஜீத்துடன் நடித்த ஒரே காரணத்துக்காக ‘அபிராமி அபிராமி’ என குணா கமல் மாதிரி அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட துவங்கியிருந்தார்கள். ஆனால், எல்லாம் விழலுக்கு இரைத்த நீராயிற்று.

பிக் பாஸ் 3ல் பங்குபெறும் போட்டியாளர்களின் பட்டியல் வெளியானபோது, அஜித் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு அபிராமிக்கு கிடைத்தது. காரணம், அஜீத்தின் அடுத்த ரிலீசான ‘நேர்கொண்ட பார்வையில்’ மூன்று முக்கிய கேரக்டர்களில் ஒருவராக அபிராமியும் நடித்ததே காரணம். சிம்ரன் போஸ்டரையே நாங்கெல்லாம் மூணு மணி நேரம் பார்ப்போம்கிற மாதிரி, அஜீத்துடன் நடித்த ஒரே காரணத்துக்காக ‘அபிராமி அபிராமி’ என குணா கமல் மாதிரி அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாட துவங்கியிருந்தார்கள். ஆனால், எல்லாம் விழலுக்கு இரைத்த நீராயிற்று.

NerKonda Paarvai

பிக் பாஸ் வீட்டுக்குள் அபிராமியும் அவர் சேர்ந்திருக்கும் கூட்டமும் அடிக்கும் லூட்டியும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே, பார்வையாளர்களுக்கு எரிச்சலை தரத்துவங்கியுள்ளது. ஒருத்தரை ரொம்ப நல்லவராக காட்டுவதற்காக இன்னொருவரை மிகமோசமனாவராக காட்டும் ஸ்க்ரிப்ட்தான் காரணம் என்றாலும், சராசரி ரசிகர்களுக்கு இது ஒரு உண்மை நிகழ்ச்சி மாதிரியே தோன்றுவதால், அபிராமி பேர் டோட்டல் டேமேஜ். நேர்கொண்ட பார்வை அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கும் நேரத்திலா, படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்று இப்படி ஒரு கெட்டப்பெயரை வாங்குவது, அது படத்தின் வசூலிலும் எதிரொலிக்காதா என்றெல்லாம் அங்கலாய்க்கத் துவங்கியிருக்கிறார்கள் தல ரசிகர்கள்.