பிக் பாஸ் வீட்டில் அதிரடியாக என்ட்ரி கொடுத்த கஸ்தூரி: ஆரம்பமே சாக்ஷிக்கு ஆப்பா? 

 

பிக் பாஸ் வீட்டில் அதிரடியாக என்ட்ரி கொடுத்த கஸ்தூரி: ஆரம்பமே சாக்ஷிக்கு ஆப்பா? 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 46 நாள் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா ரேஷ் மற்றும் சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து 10பேருடன் இந்த நிகழ்ச்சி நகர்ந்து செல்கிறது. 

இந்த நிலையில் இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி செல்லவுள்ளதாக ஒரு செய்தி இணையதளத்தில் உலா வந்து கொண்டு இருந்தது. அது தற்போது உண்மையாகவே நடந்துள்ளது. அதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒரு கிஃப்டு டப்பா இருப்பதைக் கண்டு ஓடி பிரிக்க ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அப்போது அதிலிருந்து வெளியே வந்த கஸ்தூரியைப் பார்த்து அனைவரும் அரவணைத்து வரவேற்றனர். வந்த உடனே கஸ்தூரி, சாக்ஷியிடம், ‘உங்களிடம் நான் நிறைய கேள்வி கேட்க ஆசை படுகிறேன்’ என்று ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமின்றி இவர் தனக்கு சாண்டியை பிடிக்காது என்று ஒரு முறை பேட்டியில் கூறியுள்ளதால் கண்டிப்பாக எதாவது ஒரு சர்ச்சையைக் கிளம்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.