பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

 

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது இவரா?  ரசிகர்கள் அதிர்ச்சி!

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் ப்ராசஸ் இல்லை. ஆனால்  இந்த வாரம் எலிமினேஷனில் சேரன், லாஸ்லியா, கவின், ஷெரின், முகேன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

லாஸ்லியா போட்டியில் கவனக்குறைவாக உள்ளார், ஷெரின் ஒரு கடுமையான போட்டியாளர், முகின் இன்னும் அவரது தனித்துவத்தை வெளிப்படுத்தவில்லை என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டன. அதே சமயம் நாமினேட் ஆகியுள்ள ஐவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் தனித்தனியே உள்ளது. அவர்களின் துணையால் தான் பலரும் இன்னும் பிக் பாஸ் வீட்டுக்குள்  உள்ளனர்.

sheran

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு சேரன் வெளியேறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற போட்டியாளர்களை விட சேரனும் ஷெரினும் பின்தங்கியுள்ள நிலையில் ஷெரினை விட சேரன் தற்போது குறைவான வாக்குகள் பெற்றுள்ளதாகவும், இதனால் அவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே சேரனை ஆட்டத்தில் கலந்துகொள்ள விடாமல், நடுவர் போன்ற பதவிகளைக் கொடுத்துக் காப்பாற்றி வந்த பிக் பாஸ், சீக்ரெட் ரூமுக்கு அனுப்பிக்கூட மீண்டும் சேரனை காப்பாற்ற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் சொல்வதைப் போல திருப்பங்கள் நடக்குமா என்ற ரீதியில் பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.