பிக் பாஸ் வீட்டிலிருந்து பின்பக்க வாசல் வழியே அதிரடியாக வெளியேற்றப்பட்ட சரவணன்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து பின்பக்க வாசல் வழியே அதிரடியாக வெளியேற்றப்பட்ட சரவணன்!

கமல்ஹாசன், அரசுப் பேருந்துகளில் செல்லும் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். மேலும், பெரும்பாலானோர் பணிக்குச் செல்லும் அவசரத்தில் கூட்டத்தில் முண்டியடித்து செல்கின்றனர். அதில் வேண்டுமென்றே பெண்களை உரச வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்களும் உண்டு என்று கூற, தனது கையை உயர்த்தி ஆமோதித்தார் சரவணன்.

பதிலுக்கு, பாருங்கள் சரவணன் கூட அதைக் கண்டித்திருப்பார் போல என்று கமல்ஹாசன் கூற, நான் கல்லூரிக் காலத்தில் அப்படி செய்திருக்கிறேன் என்று பொதுவெளியில் கூறினார் சரவணன். அதிர்ச்சியடைந்த நடிகர் கமல்ஹாசன், சரவணன் அதையும் தாண்டி புனிதராகிவிட்டார் என்று கூறினார்.

இந்த விவகாரம் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற்ற போதிலும் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணனை அழைத்து பேசிய பிக்பாஸ், நீங்கள் தேசிய தொலைக்காட்சியில் பொதுவெளியில் இவ்வாறு பேசிய காரணத்தினால் இந்த நிகழ்ச்சியில் உங்களால் தொடர முடியாது. உங்களை வெளியேற்றுகிறோம் எனக்கூறி பின் பக்க வாசல் வழியே வெளியேற சொன்னார். இதனால் நண்பர்களிடம் கூட சொல்லாமல் சரவணன் வெளியேறினார்.