பிக் பாஸ் வீட்டிற்குள் ‘அர்ஜுன் ரெட்டி’: ரசிகைகளாக மாறிய ஹவுஸ்மேட்ஸ்!

 

பிக் பாஸ் வீட்டிற்குள் ‘அர்ஜுன் ரெட்டி’: ரசிகைகளாக மாறிய ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவை முன்னிட்டு சவுத் சென்சேஷன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவ்ரகொண்டா பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவை முன்னிட்டு சவுத் சென்சேஷன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவ்ரகொண்டா பிக் பாஸ் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று முதல் ஆரம்பமாகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் பைனல்ஸில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த சீசனின் டைட்டில் வின்னரை கமல்ஹாசன் நாளை அறிவிக்கவுள்ளார்.

Biggbossfinals

இந்நிலையில், கிராண்ட் ஃபினாலேvஐ முன்னிட்டு, தமிழில் அறிமுகமாகும் ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவ்ரகொண்டா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த சர்ப்ரைஸ் விசிட் ஹவுஸ்மேட்ஸை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ திரைப்படம் வரும் அக்.5ம் தேதி ரிலீசாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் புரொமோஷனுக்காகவும், தமிழ் மக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் விஜய் தேவரகொண்டா தமிழ் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

இது தொடர்பான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பிக் பாஸ் டிராபியை உணர்ந்து பாருங்கள். உங்கள் நண்பர் ஒருவர் வருகிறார் என்று கமல் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். ‘கீதா கோவிந்தம்’ பாடல் இசைக்க பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்த ரவுடியை பார்த்து ஹவுஸ்மேட்ஸ் வாயை பிளந்தனர். தமிழ் மக்களே அங்கே வரவா? என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று விஜய் தேவரகொண்டா கூறியதும் பிக் பாஸ் அரங்கமே அதிர்ந்தது.

இன்றைய நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் தேவையில்லை, அர்ஜுன் ரெட்டி மட்டும் போதும் என அவரது ரசிகைகளும், பிக் பாஸ் ஃபாலோயர்ஸும் ட்வீட்டி வருகின்றனர்.