பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஜெய் பட நாயகி!

 

பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஜெய் பட நாயகி!

பிக் பாஸ் வீட்டிற்குள் ஜெய் பட நாயகி நுழையுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் ஜெய் பட நாயகி நுழையுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகிறது. தமிழில் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போன்று தெலுங்கில் வரும் 21ஆம் தேதி முதல் பிக்பாஸ் தெலுங்கு 3 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நாகார்ஜூனா தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் சிலரின் பெயர்கள் உலா வரும் நிலை தொடங்கியுள்ளது. ஆனால் ஒருசிலர் அந்த தகவலை மறுத்துள்ளனர். 

hebeh

இந்த நிலையில் இதில் ஜெய் நடித்த ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படத்தில் நடிகையாக அறிமுகமான ஹெபா பட்டேல் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் அதன் பின்னர் பல தெலுங்கு கன்னட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த தெலுங்கு திரைப்படமான ’24 Kisses’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.