பிக் பாஸ் வீட்டின் அடுத்த வார தலைவர் யார் தெரியுமா? 

 

பிக் பாஸ் வீட்டின் அடுத்த வார தலைவர் யார் தெரியுமா? 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 61 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இது வரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், மதுமிதா, சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வார தலைவராக ஷெரின் உள்ளன நிலையில் அடுத்த வார தலைவரைத் தேர்ந்தெடுக்கும் டாஸ்க் நடைபெறுவது போல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரின் புகைப்படமும் பொருத்தப்பட்ட போர்டு வைக்கப்பட்டுள்ளது. அப்போது யாருக்கு 5க்கும் மேற்பட்ட வாக்குகள் வருகிறதோ அவர்களே அடுத்த வார தலைவர் என்று பிக் பாஸ் அறிவித்தார். 

#Day61 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/mMS8Nrg1L6
— Vijay Television (@vijaytelevision) August 23, 2019

அதன்படி முதல் முறையாக அடுத்த வார தலைவராகச் சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல வாரங்களாக இவர் தலைவராக வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்த நிலையில் தற்போது அது நடந்துள்ளதால் அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.