பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கமல்

 

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கமல்

பிக் பாஸ் ரீயூனியன் நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் போட்டியாளர்களுக்கு செல்போனை பரிசாக வழங்கியுள்ளார். 

சென்னை: பிக் பாஸ் ரீயூனியன் நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் போட்டியாளர்களுக்கு செல்போனை பரிசாக வழங்கியுள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்த சீசனின் டைட்டிலை ரித்விகா தட்டிச் சென்றார். இரண்டாவதாக ஐஸ்வர்யாவும், மூன்றாம் இடத்தை விஜயலக்ஷ்மியும் பெற்றனர்.

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்காக உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த பார்ட்டியில் பெரும்பாலானோர் கலந்து கொண்ட நிலையில் மும்தாஜ், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து  விருந்து அளித்த கமல்ஹாசன் விருந்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு  ரூ.26,000 மதிப்புள்ள விவோ போனை கிஃப்ட்டாக கொடுத்துள்ளார்.