பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்ள மாட்டேன்: பிரபல கவர்ச்சி நடிகை பதிவு!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்ள மாட்டேன்: பிரபல கவர்ச்சி நடிகை பதிவு!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் புரொமோ சமீபத்தில் வெளியாகி மக்களிடம் எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் புரொமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஜுன் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், போட்டியாளர்களை தேர்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில் முதலாவதாக நடிகை மதுமிதா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் 90- களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை விசித்ரா, தனது சமூகவலைத்தள பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த உலகத்தின் முன்பு பல் துலக்குவதும், தூங்கி வீங்கிய முகத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து குத்துப்பாட்டுக்கு நடனமாடுவதும், அவர்கள் கொடுக்கும் சில்லியான டாஸ்க்குகளை செய்வதும், என்னுடைய நேர்மையான உணர்வுகளை வெளிப்படுத்தாமல்,வேறொருத்தியாக என்னால் ஒருபோதும் நடிக்க முடியாது. அதனால் இதில் நான் கண்டிப்பாகக் கலந்து கொள்ளமாட்டேன் ‘என்று கூறியுள்ளார்.