‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையறை காட்சிகள்’ : தடை கேட்டு அமைச்சருக்கு பாஜக எம்எல்ஏ கடிதம்!

 

‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையறை காட்சிகள்’ : தடை கேட்டு அமைச்சருக்கு பாஜக எம்எல்ஏ கடிதம்!

‘பிக் பாஸ் 13’  நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை கோரி பாஜக எம்.எல்.ஏ ஒருவர் அமைச்சர் ஜவடேகருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

‘பிக் பாஸ் 13’  நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை கோரி பாஜக எம்.எல்.ஏ ஒருவர் அமைச்சர் ஜவடேகருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

பிக் பாஸ்  நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் பல சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும்  ‘பிக் பாஸ் 13’  சீசனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் சிலர் பெண்களுடன் ஒரு கட்டிலில் தூங்கும் சம்பவமும் நடந்தேறி வருகிறது. 

salman

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில்  நேரடியான ஆபாச காட்சிகள் உள்ளது என்றும் இதனால் நிகழ்ச்சிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் எனக் கோரி உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ நந்த் கிஷோர் குஜ்ஜார், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

bb13

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்,  பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார  சீர்கேட்டை விளைவிக்கும் ஒரு நிகழ்ச்சி. குடும்பத்துடன் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் உள்ளது. ஆண்களும் பெண்களும் ஒரே படுக்கையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக வெவ்வேறு சமூகம், மதத்தை சேர்ந்தவர்கள் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு  கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறார்கள். குடும்பத்துடன் பார்க்க தகுதியற்ற நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

bb13

இதேபோல் உத்தரபிரதேச நவ நிர்மாண் சேனா தலைவர் அமித் ஜானி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தடை சொல்லும் வரை எந்த உணவையும் சாப்பிட மாட்டேன் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.