பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக  சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை

பிரபல சீரியல் நடிகை கவிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

சென்னை: பிரபல சீரியல் நடிகை கவிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன், தம்பி உறவுகள்  இடையிலான பாசத்தை காட்டக்கூடியதாக உள்ளதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெங்கட் ரங்கநாதனின் காதலியாக ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கவிதாவுக்கு பதிலாக வேறு ஒரு புதிய நடிகை மாற்றப்பட்டுள்ளார்அவர் விலகியதற்கான முக்கிய காரணம் தற்போது கன்னட தொலைக்காட்சியில் தொடங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறாராம். அதனால் தான் சீரியலில் இருந்து அவர் விலகினாராம்.

kavitha

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் ஒரு தமிழ் சீரியலில் நடிக்க நிச்சயம் வருவேன் என்றும்அதில் நீங்கள் என்னை எதிர் பார்க்கலாம் என்றும் கவிதா  கூறியுள்ளார்.