பிக் பாஸ் காயத்ரி ரகுராம் கர்ப்பமா? வைரலாகும் புகைப்படம்!

 

பிக் பாஸ் காயத்ரி ரகுராம் கர்ப்பமா? வைரலாகும் புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளரும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விசில், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரிக்கும், அமெரிக்காவில் வசித்து வந்த  மென்பொருள் பொறியாளரான தீபக் சந்திரசேகருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு  விவாகரத்து பெற்றனர்.

இதன் பின்னர் கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிவந்த காயத்ரி நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வந்தார். ஆனால் பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்றபின் காயத்ரி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையின் மூலம் சர்ச்சையில் சிக்கிய காயத்ரியை பலரும் வசைபாடி வந்தனர்.

 

இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  காயத்ரி ரகுராம் கர்ப்பமாக இருப்பது போல் உள்ளது. அதில் பெண் ஒருவர் குழந்தையுடன் இருப்பது போன்ற இமோஜியை பதிவிட்டுள்ளது அதை உறுதி செய்வது போல் உள்ளது. உண்மையில் காயத்ரி கர்ப்பமாக உள்ளாரா? இல்லையா என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.