பிக் பாஸ் ஆங்கர் சம்பளம் ஜஸ்ட் 403 கோடி ரூபாய்தான் ஜென்டில்மென்!

 

பிக் பாஸ் ஆங்கர் சம்பளம் ஜஸ்ட் 403 கோடி ரூபாய்தான் ஜென்டில்மென்!

இந்த 13 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள சல்மான் கான் இருந்தா, ஒரு மணி நேரத்துக்கு அவருக்கான சம்பளம் 3.1 கோடி ரூபாய். அதாவது, ஒரு நிமிசத்துக்கு 5 லட்சத்துக்கும் கொஞ்சம் அதிகமா. அதாவது, ஒரு நொடிக்கு எட்டாயிரத்து சொச்சம் ரூவா. பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் செலவுசெஞ்சு, விளம்பரம் குடுத்து எடுக்குற லாபத்துக்கு குறைவில்லாம தனி நபர் ஒரே ஒரு ஆளா சல்மான் அடையப்போற லாபம்தான் கவனிக்கத்தக்கது!

கமலுக்கு இல்ல கவலைப்படாதீங்க‌ கமலுக்கு இல்ல அமைதி அமைதி! இந்த 403 கோடி ரூபா சம்பளம் இந்தி பிக் பாஸ் 13ஆவது சீசனை ஆங்கர் பண்ணப்போற‌ சல்மான் கானுக்கு. ஒரு எபிசோடுக்கு 31 கோடி ரூபாய் வீதம் வெறும் பதிமூணே பதிமூணு நாள் கால்ஷீட் (ஆனா 26 எபிசோட் கணக்கு) தந்து, ஸ்க்ரிப்ட்படி நின்னா, நடந்தா, திட்டுனா, பாராட்டுனா, கோவப்பட்டா கிடைக்கிற சம்பளம் 403 கோடி ரூபாய்கள்.

Salman Khan

இந்த 13 நாட்களுக்கும் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள சல்மான் கான் இருந்தா, ஒரு மணி நேரத்துக்கு அவருக்கான சம்பளம் 3.1 கோடி ரூபாய். அதாவது, ஒரு நிமிசத்துக்கு 5 லட்சத்துக்கும் கொஞ்சம் அதிகமா. அதாவது, ஒரு நொடிக்கு எட்டாயிரத்து சொச்சம் ரூவா. பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனம் செலவுசெஞ்சு, விளம்பரம் குடுத்து எடுக்குற லாபத்துக்கு குறைவில்லாம தனி நபர் ஒரே ஒரு ஆளா சல்மான் அடையப்போற லாபம்தான் கவனிக்கத்தக்கது! நமக்கு என்ன யோசனைன்னா, சல்மான் கானை ஆங்கரா இறக்கிவிடாம, போட்டியாளர்கள்ல ஒருத்தரா களம் இறக்கிவிட்டா, 1000 கோடி ரூவா சம்பளம் கேட்டாலும் குடுக்கலாம். ஏன்னா அந்தளவுக்கு என்டர்டெய்ன்மென்ட் கேரண்டி.