பிக் பாஸ்ல எல்லாம் மனுசன் கலந்துக்குவானா? மடிப்பு அம்சா ஜிகுஜிகு

 

பிக் பாஸ்ல எல்லாம் மனுசன் கலந்துக்குவானா? மடிப்பு அம்சா ஜிகுஜிகு

பிக்பாஸ் மூணாவது சீசனில் கலந்துகொள்வது பற்றிய கேள்விக்கு, பாதி தமிழ்நாடு பாத்துகிட்டு இருக்கும்போது நான் எப்புடி பல்லு விளக்க முடியும்? காலையில எழுந்திருக்கும்போது குத்துபாட்டுக்கு ஆடிகிட்டே எந்திரிக்கணும்கிற டாஸ்க் எல்லாம் கேட்கவே கேவலமா இருக்கு. அதுவுமில்லாம, குழந்தைங்களை விட்டுட்டு மாசக்கணக்கா மூடிவச்ச வீட்டுக்குள்ள போய் எந்த மனுசனாச்சும் இருப்பானா?

நயன்தாரா என்பார் ரகுல் ப்ரீத்தி சிங் என்பார், மடிப்பு அம்சா அறியாதார்னு புறநானூர்ல ஒரு செய்யுள் இருக்கும்னு எங்க தமிழ் வாத்தியார் அடிக்கடி சொல்வார். ஹீரோயின்களுக்கு மட்டுமே கைதட்டிய கைகள், விசிலடிக்க ஆரம்பித்தது திரையில் விசித்ராவை பார்த்த பின்புதான். அதுக்கு முன்னாடி சில்க் ஸ்மிதா. கே.எஸ்.ரவிக்குமார் ஏன் பக்காவான மசாலா இயக்குநர் என்பதற்கு அவருடைய நடிகர்கள் தேர்வும் ஒரு காரணம். அவரின் பல படங்களில் விசித்ராவுக்கு ஒரு சின்ன ரோலாவது இருக்கும்.

அது ஆச்சு, 18 வருடங்கள் விசித்ரா படத்தில் நடிப்பதை நிறுத்தி. திடீரென அவரைப்பற்றி செய்திகள்! என்னவென்று? இந்த மாதிரி பிக் பாஸ் மூணாவது சீஸனில் அவரும் பங்கேற்கப்போகிறார் என்று. அது உண்மைதானா என அறிய விரும்பிய (நம்மைப்போன்ற விசித்ரா விசிறி) இணையதளம் ஒன்று அவரை பேட்டி கண்டது. திருமணமாகி கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் சகிதம் ஹோட்டல் தொழில் நிமித்தமாக மைசூரில் மிக மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருக்கும் விசித்ரா, அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டது எல்லாம் சூப்பர் விஷயங்கள்.

Vichithra

பிக்பாஸ் மூணாவது சீசனில் கலந்துகொள்வது பற்றிய கேள்விக்கு, பாதி தமிழ்நாடு பாத்துகிட்டு இருக்கும்போது நான் எப்புடி பல்லு விளக்க முடியும்? காலையில எழுந்திருக்கும்போது குத்துபாட்டுக்கு ஆடிகிட்டே எந்திரிக்கணும்கிற டாஸ்க் எல்லாம் கேட்கவே கேவலமா இருக்கு. அதுவுமில்லாம, குழந்தைங்களை விட்டுட்டு மாசக்கணக்கா மூடிவச்ச வீட்டுக்குள்ள போய் எந்த மனுசனாச்சும் இருப்பானா? மத்தவங்களை பத்தி தெரியாது, என்னால‌ இருக்கமுடியாது, கெஸ்ட் ரோல் மாதிரி ஒரு நாள் ரெண்டு நாள்னா ஓகே என்கிறார். தன்னை ஈர்க்கும்படி ஏதேனும் கதைகள் இருந்தால், திரைப்படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறார் விசித்ரா. சார் மடிப்பு அம்சா சார்! விசித்ரா சார்!