பிக்பாஸ் வீட்டை விட்டு அவரை வெளியேற்றுங்கள்: முன்னாள் போட்டியாளர் ஆவேசம்!

 

பிக்பாஸ் வீட்டை விட்டு அவரை வெளியேற்றுங்கள்: முன்னாள் போட்டியாளர் ஆவேசம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 17 நாட்கள் வெற்றிகரமாகக் கடந்து விட்டது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் சண்டை சச்சரவுமாகச் சென்று கொண்டு இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 17 நாட்கள் வெற்றிகரமாகக் கடந்து விட்டது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் சண்டை சச்சரவுமாகச் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இது முன்பு இருந்த இரண்டு சீசன் போல் இல்லை என்று ரசிகர்கள் ஒரு குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். 

இது ஒரு பக்கம் இருக்க தற்போது உள்ள பிக் பாஸ் போட்டியாளர் குறித்து அவரவர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முன்னாள் சீசன் போட்டியாளர்களைப் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் டேனி பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். 

அப்போது இந்த வீட்டிலிருந்து யாரை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, வ’னிதாவை தான் அடுத்ததாக வெளியேற்ற வேண்டும் என விரும்புகிறேன்.அவர் தேவையில்லாமல் நிறைய விஷயத்தில் மூக்கை நுழைப்பதால் சண்டை பெரிதாகிறது.  மேலும்  சாக்‌ஷி வீட்டில் உள்ள மற்றவர்களைப் பற்றி பின்னால் பேசுகிறார் என்று கூறியுள்ளார். 

vanitha

தொடர்ந்து இதில் உங்கள் உள்ளம் கவர்ந்த போட்டியாளர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘லொஸ்லியா, தர்ஷன், பாத்திமா பாபு, சாண்டியை தான் எனக்குப் பிடித்துள்ளது. அவர்கள் தான் நேர்மையாக உள்ளனர்’ என்று கூறியுள்ளார்.